Pages

Sunday, January 17, 2010

சிட்னியில் மையம் கொண்ட "இசைப்புயல்"

எம் வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு கணங்களையும் நம் நினைவில் நிறுத்தி வைக்க முடிவதில்லை. என்றோ, எப்போதோ அனுபவித்த நிகழ்வு மட்டும் நம் ஆயுசுக்கும் கூட வரும், அது எத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும். அப்படி ஒரு விதமான அனுபவம் தந்த திளைப்பில் அதனை இங்கே பதிவாக்கிக் கொண்டிருக்கின்றேன்.

இந்தியாவின் பெரும் இசையமைப்பாளர், ஆஸ்கார் விருது பெற்றவர் என்ற அடைமொழிகளோடு தான் அவுஸ்திரேலிய ஊடகங்கள் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசை மேதையை சமீபகாலமாக அதிகம் உச்சரித்தன. அதற்குக் காரணமாக அமைந்தது நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் Sydney Festival 2010. ஆம் இந்த நிகழ்வுக்கு வந்து சிறப்பிக்க இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்றும் அவர் யார் என்று சிறு குறிப்போடும் அவ்வப்போது அடையாளப்படுத்திக் கொண்ட இந்த நிகழ்வு ஆரம்பமாகும் தினம் வரை.

நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தின் மேற்குப் பிராந்தியம் பெருமளவு ஆசிய நாட்டவர்களையும் உள்வாங்கிக் கொண்ட பிரதேசமாகும். இங்கு தான் சிட்னி முருகன் ஆலயம் என்னும் பெரியதொரு ஆலயமும், இலங்கை, இந்திய மக்களின் குடியேற்றம் பரவலாக உள்ள இடமுமாகும். இந்த மேற்குப் பிராந்தியத்தின் தலைநகராக விளங்குவது Parramatta என்ற பெருநகராகும். இந்த நகரில் உள்ள Parramatta Park என்ற விசாலமான பூங்காவே ஏ.ஆர்.ரஹ்மான் நடத்த இருக்கும் அதுவும் உலகின் முழுமையான இலவச நிகழ்ச்சியாக அமைந்த Indo Australian Peace concert என்ற நிகழ்வாகும். இதனை நியூசவுத்வேல்ஸ் மாநில அரசாங்கமே பொறுப்பேற்று நடத்தியதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பும், ஆர்வமும் தொற்றிக்கொள்ள, இரவு 7.30 மணிக்கு நடைபெறவிருந்த அந்த நிகழ்வுக்கு நண்பர்கள் புடைசூழ மதியம் 12 மணிக்கே Parramatta Park இற்கு நடைபயில்கின்றோம். வழியெங்கும் வாகனங்களை நிறுத்துவதற்கு அன்று தற்காலிகத் தடை போடப்பட்டிருந்தது. வீம்புக்காக ஏற்கனவே தரித்து நின்ற கார்களைத் தூக்கி அகற்றும் பணியில் போக்குவரத்து அதிகார சபையின் tow away வாகனங்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. Sydney Festival என்று பெயர் தாங்கிய ரீ சேர்ட் அணிந்து, விழாவின் கையேட்டுடன் வெள்ளைக்கார இளசுகள். இதையெல்லாம் கடந்து பூங்காவுக்குள் நுழைகின்றோம். அது நாள் வரை சுதந்திர வலயமாக இருந்த பூங்கா கூட்டுப் படைத் தலைமையகம் கணக்காக ஆங்காங்கே தடுப்பும் மறிப்புமாக இருக்கிறது. ஒற்றைப் பாதை மட்டும் தான். அந்தப் பாதையால் போக முன்னர் எல்லோருடைய கைப்பைகளும் சோதனையிடப்பட்டு அனுமதிக்கப்படுகின்றார்கள். "என்ன இது வழியில் போகின்றவர்களைப் பார்த்தால் சில நூறும் தேறாதே" என்ற சொல்லிக் கொண்டே நிகழ்வு நடக்கும் திடலை நோக்கி நடக்கின்றோம். சிட்னியின் முன்னணி நாளேடான Daily Telegraph ஏ.ஆர்.ரஹ்மானின் முழு அளவிலான படத்தை முன் அட்டையாகப் போட்டு souvenir இதழாகத் தயாரிக்கப்பட்டு அந்தத் திடலின் முகப்பில் வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். ஓரமாக தற்காலிக உணவகங்கள் போடப்பட்டும், தாக சாந்திக்காக Sydney Water தன் இலவசப்பணியையும் செய்து கொண்டிருந்தன.

நிகழ்வு நடைபெறும் அரங்கம் திடலில் நடுநாயகமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. பார்வையாளர் பகுதிகள் வலயங்களாகத் தடுப்புக்கள் போடப்பட்டு இருக்கின்றன. நேராக அந்த முதல் வலயத்தில் நிகழ்வு நடைபெறும் மேடைக்குச் சமீபமாக இடம் பிடித்துக் கொள்கின்றோம். 30 பாகைக்கு மேல் சூரியன் சோதனை செய்து கொண்டிருந்தான். பானி பூரி தட்டுக்களுடன் சூழவும் ஹை ஹை வட இந்தியக் கூட்டம். பன்னிரண்டு மணியில் இருந்து காத்திருப்போர் பட்டியலில் சில நூறு வெள்ளையர்கள், மற்றைய சமூகத்தினரும் அடக்கம். மெல்ல மெல்ல நூறு இருநூறாகப் படையெடுக்கின்றது நம் முதல் வலயத்துக்குள் சூரியக் குளியலில் நாம் வேர்த்துப் போன இடியப்பம் கணக்காகத் தவமிருக்கிறோம் வெறும் தரையில். மூன்று மணிக்குள் முதல் வலயம் நிரம்பி கூட்டம் ஐந்தாயிரத்தைக் கடந்திருக்கும். இதிகாசம் வர்ணிக்கும் ஆஜானுபாகு தோற்றம் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வலுக்கட்டாயமாக முன் வலயத்தை மூடித் தடுப்புப் போடுகிறார்கள். அங்கிருந்து வெளியே சென்று திரும்புபவர்களுக்கு அடையாளமாக சிவப்பு முத்திரையைப் பொறிக்கப்படுகின்றது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேனே என்று சில புத்திசாலிகள் நான்கு, ஐந்து மணி கணக்கில் வந்து முன் இருக்கைகளுக்காக நுழையப் பலவிதமான அஸ்திரங்களையும் பாவிக்கிறார்கள்.
"My brother sits inside" இது லேட்டா வந்த ஒருவர் பாவித்த அஸ்திரம்
"Who cares man" இது ஆஜானுபாகு செக்யூரிட்டி.

ஐந்து மணி அளவில் சூரியன் ஏமாற்றத்தோடு அங்கிருந்து நகர்ந்து கொள்ள மெல்லிய சிலிர் காற்று வந்து ஹலோ சொல்லிக் கொள்கிறது. ஆங்காங்கே பொருத்தப்பட்ட பெரும் திரைகள் இயங்க ஆரம்பிக்கின்றன. பாலிவூட் சினிமா குறித்து உலகெங்கும் உள்ள விமர்சகர்களும், ஹிந்தி சினிமாவின் கரன் ஜோகர் அசுதேஷ் கோவாரிகர், குல்சார் உள்ளிட்ட பிரபலங்களும் பேசுகிறார்கள். அவ்வப்போது ராஜ்கபூர் காலத்தில் இருந்து ஷாருக், சல்மான், அமிர் கான்கள் ரித்திக் ரோஷன் காலம் வரையான தேர்ந்தெடுத்த படத்துண்டுகளும் பாடல்களாக வருகின்றன.
"இந்தி சினிமா ஒன்றும் இந்திய சினிமா இல்லை" என்று மம்முட்டி கணக்காகக் கத்த வேண்டும் போலிருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளரை முன்னுறுத்திச் செய்கின்ற விழாவில் அவரின் பெருமைகளையாவது ஒரு பத்து நிமிடத்தில் சொல்லியிருக்கலாமே, சிட்னியிலும் வடக்கு வாழ்கிறது.

எங்களுக்குப் பின்னால் பரந்து விரிந்த அந்தத் திடலை மீண்டும் திரும்பிப் பார்க்கின்றேன். சில மணி நேரங்களுக்குள் சில ஆயிரங்களாக இருந்த கூட்டம் எண்பதாயிரத்தைத் தொட்டு நிரம்பி வழிகின்றது.

மணி ஏழுமணியைக் காட்ட விழா ஆரம்பமாகின்றது என்ற அறிவிப்போடு அவுஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளின் பிரதிநிதியாக Uncle Sam இன் பேச்சோடு ஆரம்பிக்கின்றது.
அவரைத் தொடர்ந்து நியூசவுத் வேல்ஸ் மாநிலப் பிரதமர் Kristina Keneally இன் சம்பிரதாயமான பேச்சு சுருக்கமாக வந்து நிறைகிறது. அவரைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானை வரவேற்க அவுஸ்திரேலிய முன்னாள் கிறிக்கற் அணித்தலைவர் Steve Waugh. தனக்கும் இந்தியாவுக்கும் கடந்த 25 வருஷ பந்தம் இருக்கிறது என்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையுலகின் சச்சின் டெண்டுல்கர் என்று தன் ட்ரேட் மார்க்கைப் பதித்தார். இந்த நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்புச் செய்து கொண்டிருந்த ABC தொலைக்காட்சி சார்பில் இன்னொரு கிறிக்கற் வீரர் மத்தியூ ஹெய்டன் நிகழ்ச்சித் தொகுப்புச் செய்தது இன்னொரு சுவாரஸ்யம்

அரங்கம் மெளனமாகிறது. அடுத்து என்ன என்ற ஆவலோடு முழுக்கூட்டமும் மயான அமைதியில். ட்ரம்ஸ் சிவமணி தன் கழுத்தில் ட்ரம்ஸ் ஐத் தொங்க வைத்துக் கொண்டே ஆரம்பிக்கிறார் தன் கச்சேரியை, அது மெல்ல மெல்ல டிக்கு டிக்கு டிக்குடீ Rang De Basanti என மாறி வேகம் பிடிக்கின்றது. அரங்கத்தில் மேல் அடுக்குகளில் இருந்து நடன மங்கையரும் கீழ் அடுக்குகளில் இருந்து ஆடவர்களும் ஆடியவாறே பாடுகின்றார்கள். தலேர் மெஹந்தி, சித்ரா பாடிய பாட்டு பாடகர் இல்லாமல் கண்கவர் ஆட்டத்தோடு நிறைகிறது.


மேடையின் வாய் மெதுவாகப் பிளந்து நகர்கிறது, இருக்கையில் அமர்ந்தவாறே ரஹ்மானைத் திருப்பிக் காட்டுகிறது. கூட்டம் வாய் பிளந்து ஹோஓஓஓ என்று ஆர்ப்பரிக்கின்றது. ரஹ்மான் "வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் எனது நன்றி" என்று விட்டுப் பாடத் தொடங்குகிறாரே ஒரு பாட்டு, வந்திருந்த minority தமிழ்க் கூட்டமும் majorityக்கு சவால் விடுவது போல கைகளை அகல விரித்து அசைத்தவாறே கூக்குரல் இடுகிறார்கள். சும்மாவா, அவர் பாடிய முதல் பாட்டு சிவாஜியில் இருந்து "அதிரடிக்காரன் மச்சான் மச்சான் மச்சானே".

இதுக்கு மேல் இருக்கவே முடியாது என்று முழுக்கூட்டமுமே மொத்தமாக எழுந்து நின்று இரண்டு மணி நேர நிகழ்ச்சி முடியும் வரை நின்று கொண்டே ஆடியும் பாடியும், கைதட்டியும் ரசித்தது இதுவரை நான் பார்த்திருக்காத புதுமை.

தொடர்ந்து A.R.Rahman Connections என்ற தனி ஆல்பத்தில் இருந்து JIYA SE JIYA பாடலும், தில் சே படத்தில் இருந்து தில் சே ரே, Tere Bina என்று குரு படத்தில் இருந்தும் பாடினார் ரஹ்மான். அவரோடு கூட்டுச் சேர்ந்து சுருதி கூட்டினார்கள் பிளேஸ், பென்னி தயாள் , அஸ்லாம் , மற்றும் சில வட நாட்டுக் குரல்கள்.

பிளெஸ்ஸிக்கு வழக்கம் போல பாடல்களுக்கு முன்னும் இடையிலும் வரும் சிறப்புச் சப்தப் பணி தான் இந்த நிகழ்ச்சிக்குக் கொடுக்கப்பட்டது. தன் வழக்கமான வெள்ளைக் கலர் ஜம்பரும், வெள்ளைக் கோடு பிளாஸ்டிக் கண்ணாடி சகிதம் வந்த பென்னி தயாள் ஹோரஸ் கொடுத்தும் ஒரு சில பாடல்களில் ஆடவும் செய்தார். அஸ்லாமுக்கு இன்னும் கூடுதல் தகுதியாக அதிக பாடல்களில் ரஹ்மானுடன் சேர்ந்து பாடிச் சிறப்பித்தார். அஸ்லாமின் குரலில் ரஹ்மானுக்கு பெரு விருப்பு போல. காதல் தேசம் காலத்தில் இருந்து மனுஷரை விடமாட்டேன் என்கிறார். அஸ்லாம் இடையே ஒரு சில படங்களுக்கு இசையமைப்பாளராக ப்ரொமோஷன் கிட்டிப் போனாலும் ரஹ்மானிடமே மீண்டும் வந்து விடும் யோகம் அவருக்கும்.

இடையில் Pray For Me Brother என்ற தனிப்பாடலும் பெருந் திரைகளில் காட்சியாக விரிந்தது.

ஹோரஸ் குரல்களாக ரஹ்மானின் தங்கைகளில் வழக்கமாக மேடையில் வரும் ரைஹானா உடன் இஸ்ராத்தும் இணைந்து கொண்டார்.
சைய சையா (தைய தையா) பாட்டின் "காட்டு வழியே தூக்கணாங்குருவீகளாம்" என்று ரெஹ்னா சுபாவின் குரலில் அச்சொட்டாகப் பாட ஹிந்தியாகத் தொடர்ந்தது.
பாடகிகளில் "ஜெய ஹோ" புகழ் தான்வீ உடன் ஒரு இன்னொரு வட நாட்டுப் பாடகியும் இணைந்து பாடினார். அவர் யார் என்று இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ரஹ்மானோடு கூடவே பயணிக்கும் வெள்ளை இனப்பாடகி Clare ஆங்கிலத்தில் பாடியும் , பாடல்களிடையே மெருகேற்றியதோடு அழகாக ஆடவும் செய்தார்.
இவர்களின் குரல்களில் குரு (ஹிந்தி) படத்தில் இருந்து நன்னாரே பாடலும் Delhi 6 இல் இருந்து Delhi 6 பாடலும் கூட வந்தன. "கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு' பாடலை தான்வி உடன் அந்த வடநாட்டுப் பாடகியும் இணைந்து பாடியதுயது ஆடியதும் Fire ;-)

"குட் ஈவினிங் சிட்னி" என்றவாறே தன் நாசியை உயர்த்திய சிரிப்பைக் காட்டி விட்டு பக்காவாக பாடல்கள் சிலதைக் கொடுத்தார் ஹரிஹரன். Nahin Saamne (தமிழில் கலைமானே) என்ற தால் பாடலை அவர் பாடியபோது கள் வெறி கொண்டு களிப்பில் இருந்தது ரசிகர் கூட்டம். நம் ரசிகர்களுக்கு ஒரு போட்டி வைப்போமா ரஹ்மான் என்று சொல்லி விட்டு கூட்டத்தின் இரு பக்கமுள்ள ரசிகர்களுக்கும் தான் பாடுவதை மீண்டும் பாடுமாறு கேட்டவாறே சில ஸ்வர வரிசைகளை அள்ளி விட்டார். இரண்டு பக்கமும் சேர்ந்திசையாக மீள எதிரொலித்தன அவை. போட்டியில் எல்லோருமே வெற்றி ஏனென்றால் இங்கே வெற்றி தோல்விக்கு இடமில்லை என்று முறுவலித்துக் கொண்டே சொன்னார் ரஹ்மான்.


உங்களுக்காக ஒரு ரொமான்டிக் பாட்டு என்றவாறே பம்பாய் படத்தின் ஹிந்தி தழுவலாக துஹிரே (உயிரே) என்று ஹரிஹரன் பாட ஆரம்பிக்க மீண்டும் ஒரு கலக்கல் பாட்டாச்சே என்று கூட்டமும் ஆரவாரித்தது. அந்தப் பாடலை ஹரிஹரன் தன் பாணியில் உச்ச ஸ்தாயியில் சாதகம் பண்ணி மெல்லக் கீழிறங்க அதைக் கையில் ஏந்துமாற் போலப் பிடித்து "உதயா உதயா உளறுகிறேன்" என்று பாடி தேசிய நதி நீர் இணைப்பாகச் செய்து வைத்தார் சாதனா சர்க்கம்.




இடையில் ஒரே பாடல் பாடிய அந்த ஆபிரிக்கப் பாடகரும், இன்னொரு ஹிந்தி முகமும் அந்த நேரத்தில் அந்நியமாக இருந்த புதுப்பாட்டுக்களிலும் சிறப்பாகவே செய்தார்கள்.

பின்னணி இசைத்தவர்களில், ட்ரம்ஸ் சிவமணி, புல்லாங்குழல் இசைத்த நவீன் தவிர மற்றையவர்கள் பழக்கமற்ற முகங்கள். ஆனால் வாசிப்போ ரஹ்மானின் பஞ்சாதன் ஸ்டூடியோவில் கேட்ட ஒலித்தரம். அதுவும் நிகழ்ச்சி முடியும் போது சிதார் இசைத்த Asad Khan உம், கீபோட் இல் கொத்து பரோட்டா போட்டவரும் அவரவர் கணக்கில் சுயேட்சையாக நின்று ஜெயித்து விட்டார்கள்.

இடையில் கழுத்தில் ஸ்டைலாக கீ போர்ட் போட்டுக்கொண்டே அதை வாசித்தவாறே பாடிய அதே ரஹ்மான், தலையில் வெண் தொப்பியுடன் சம்மணமிட்டுக் கொண்டே ஆர்மோனியத்தை வாசித்தவாறே கூட அஸ்லாம் துணை சேர்க்க Khwaja Mere Khwaja (ஜோதா அக்பர்) போன்ற சூஃபி வடிவ மெட்டுக்கள் சிலதைப் பாடித் தன் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். குறித்த ஜோதா அக்பர் பாடல் மழை வேண்டிப் பாடுவது போன்றே பாடப்பட்டது என்று அவர் சொல்லிப் பாடிய போது அதுவரை ஆங்காங்கே மெல்லிய துளிகளாக துமித்த மழை மேகம் பாடல் முடியும் போது வெறிகொண்டு சுழற்றி அடித்தது. மழையில் நனைந்தாலும் இசை மழையை விடமாட்டோம் என்று அப்படியே கட்டுப் போட்டுக் கிடந்தது கூட்டம்.






அது மட்டும் போதுமா மீண்டும் நவீன உலகிற்குத் திரும்பிய இசைப்புயல் "முஸ்தபா முஸ்தபா' என்றும், பிளேஸ் புதுவிதமான ஒரு ராப் போட்டுக் கொண்டே பார்வையாளர் கடலில் இருந்து வர "அந்த அரபிக்கடலோரம் ஓர் அழகைக் கண்டேனே" என்றும் கலகலக்கினார். நிகழ்ச்சி முடிந்து ஒரு நாள் கடந்த நிலையிலும் முஸ்தபா முஸ்தபாவை என் காதே கதி என்று சுற்றிக் கொண்டு இருக்கின்றது.





ஒவ்வொரு பாடலுக்கும் விதவிதமான காட்சிகள் பின்னே விரிகின்றன. சில இடங்களில் பாடல்களுக்கு அணி சேர்த்த பாடகர்கள், பாடலாசிரியர் என்ற விபரம் வேறு. அத்தோடு தேவையான பாடல்களுக்கு உறுத்தல் இல்லாத நடன அமைப்புக்கள் அவை இந்திய நடனங்களில் இருந்து மேற்கேத்தேயம் வரை, எண்பதாயிரம் பேரையும் சம அளவில் எட்ட வைத்த ஒலித் துல்லியம், நீட்டி முழக்கும் பேச்சுக் கச்சேரிகள் இல்லதது இப்படி இந்த இந்த இசை நிகழ்ச்சியினை மெருகேற்றிய அம்சங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
மேடை நிகழ்ச்சி என்று வந்து விட்டாலே போதும் முன்னே ஒரு ஸ்டாண்ட் வைத்து அதில் வைத்த புத்தகத்தை ஒப்புவிக்கும் பாடகர்களை ஒழித்த பெருமை ரஹ்மான் காலத்திலாவது வந்ததே என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மேடை இசை நிகழ்ச்சி என்றாலே வழக்கமாக ஒலிப்பதிவு செய்த பாடலைக் குறித்த பாடகரை வைத்து மீண்டும் அச்சொட்டாகப் பாடவைப்பது என்ற கலாச்சாரத்தை இனியாவது இப்படியான நிகழ்ச்சிகளைப் பார்த்து மற்றவர்களும் குறிப்பெடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு வந்த ஒவ்வொரு பாடகனும் பாடகியும் அந்தப் பாடல்களை மனதில் இருந்து எழும் உணர்வாகப் பாடிக் கொண்டே அவற்றினை அனுபவித்துப் பாடியது வெகு சிறப்பு. ரஹ்மானின் வெற்றிக்குப் பின்னால் அவரோடு இசைக்கும் வாத்தியக் கலைஞர்களும் இருக்கின்றார்கள் என்று நேரே உறுதிப்படுத்தினார்கள் உறுத்தல் இல்லாத இசை கொடுத்த அந்த வாத்தியக்காரர்கள்.



போர்க்களக் காட்சி ஒன்று விரிகின்றது. பின்னே திரையில் ஆயிரம் ஆயிரம் படைகள். அதற்கு முன்னே நிஜமான படையணி ஒன்று நடுவே ரஹ்மான். பெரும் முரசறைதலோடு ஜோதா அக்பரின் Azeem-O-Shaan Shahenshah பாடலை அவர் பாடி அதையும் லாவகமாக 'வீரபாண்டிக் கோட்டையிலே மின்னல் அடிக்கும்" வேளையிலே என்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கித் தன் பாட்டுப் படையைத் திருப்பி விட்டார்.


மற்றவர்களை நேசியுங்கள், உலகத்தை ஒன்றாகப் பாருங்கள் என்று நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாகச் சொல்லியவறே இரண்டரை மணி நேரமாக வழங்கிய அந்த நிகழ்ச்சி முடியப் போகின்றது என்று ரஹ்மான் சொல்லவும் ரசிகக் கண்மணிகள் விடுவார்களா? மேலெழுந்து பரவியது தொடர்ச்சியான வாண வேடிக்கைகள் வின்ணில் பரவ ஜெய ஹோ என்ற தன் விருதுப் பாடலோடு வந்தே மாதரம் பாடலையும் இணைத்துக் கூட்டாகப் பாடிக் கூட்டத்தை அரை மனதோடு கலைய வைத்தார். மார்ட்டின் லூதர் கிங் இன் பொன்மொழிகளும் மகாத்மா காந்தியின் வாசசங்களும் திரைகளை நிறைத்தன.



be the change you wish to see in the world!

ரஹ்மான் வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கலாம், பொம்பிளைகள் பொட்டு வைத்து கும்மி அடித்திருக்கலாம், ரஹ்மான் இன்னும் நிறையத் தமிழ்ப்பாடல்களைப் பாடியிருக்கலாம் என்ற வழக்கமான விமோசனமில்லாத விமர்சனங்களும்(!) ஒலிக்காமல் இல்லை. ரஹ்மான் என்ற கலைஞன் தமிழைக் கடந்த பொதுவான இந்திய இசையின் அடையாளமாக மாறி எவ்வளவோ காலம் கடந்து விட்டது. இசைக்கு மொழி இல்லை என்பதை அந்த அரபிக் கடலோரம் ரசித்த ஹிந்திக்காரனும், ஜோதா அக்பர் பாட்டுக் கேட்டு ரசித்த தமிழனும் ஒத்துக் கொள்வான். ஏன் இந்த இரண்டு மொழிகளும் தெரியாமல் இசை மழையை அனுபவிக்க மட்டும் வந்த சில நூறு அவுஸ்திரேலியனும் உணர்ந்து கொள்வான். உண்மையான/நேர்மையான ரசிகனுக்கு அதுதான் இலக்கணம். ஆனால் இந்த அரைவேக்காட்டு விமர்சனங்கள் எல்லாம் கடந்து, புதிய குரல்களை நான் தேடிக் கொண்டே இருப்பேன், இசையை இன்னும் நான் தேடிப் படித்துக் கொண்டே இருப்பேன் என்று ஓடிக் கொண்டே இருப்பார் ரஹ்மான். ஒவ்வொரு வெற்றியாளனின் ரகசியமும் அதுதான் சாகும் வரை தேடுவார், ஓடுவர் ரஹ்மானைப் போல.

பதிவும் படங்களும் முன் அனுமதி பெற்று மீள் பிரசுரம் செய்யப்படவேண்டியவை.
video courtesy: senthilles1

33 comments:

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

அருமை நண்பரே,
நேரில் பார்த்த உணர்வு.
வாழ்த்துக்கள்.
காணொளி சுட்டி கிடைக்குமா?
நன்றி.

Pot"tea" kadai said...

Thanks for the extensive coverage. I had a chance to watch it on ABC2 when he started doing tamil numbers together 40 mins before finish. It's great that no mis-adventures happened after that much of massive turn out.

WISH I WERE THERE!

:)

when steve waugh was bowling bouncers on stage, Mat Hayden hitting sixers on telly :))

balavasakan said...

ஒரே ஒரு வார்த்தை தான் அண்ணா நீங்கள் ரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்பரொம்ப ரொம்ப ரொம்ப........................................கொடுத்து வைச்சவருங்கோ...

சி தயாளன் said...

அருமையான தொகுப்பு...வீடியோ தொகுப்பு வந்தால் எடுத்து பார்க்க வேணும்,,:-)

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

நீங்க திரையில இரண்டு மூன்று தரம் வந்த கதை சொல்லவேயில்ல??

நல்ல விவரணை பிரபா.

ARV Loshan said...

ஆகா.. அருமையான விரிவான தொகுப்பு..
பதிவும், படங்களும் உங்களோடு அமர்ந்து நேரில் இசை நிகழ்ச்சியைப் பார்த்த உணர்வைத் தந்தன..

ரஹ்மானின் மொழி கடந்த இசைப் பயணம் பற்றியும், பதிப்புரிமை பற்றியும் சொன்னவை சொல்ல வேண்டியவையே..

ஜோதா அக்பர் பாடலின் பின் மழை.. ஆச்சரியம்..

Karthik said...

Thank you for the post. I saw a video where he performed Dil Se Re and Kojam Nilavu. Performance was excellent and the guy on keyboard was also great.

தமிழ்பித்தன் said...

நன்றாக ரசித்து பதிவின் மூலம் எங்களையும் ரசிக்க வைத்திருக்கிறீர்கள். நன்றி!

Unknown said...

ரொம்ப நல்ல விவரனை கானா. நன்ன்ன்ன்ன்ன்ன்றி. :)

குசும்பன் said...

//எண்பதாயிரம் பேரையும் சம அளவில் எட்ட வைத்த ஒலித் துல்லியம்,//

இங்கேதான் பலரும் சொதப்புகிறார்கள், ஒலிதரத்தை சோதிக்காமல் நேராக ஸ்டேஜுக்கு வந்து ஆரம்பித்துவிடுகிறார்கள், இவர் கடைசி வரிசையில் நின்று சரியாக கேட்கிறதா என்று முதல்நாளே சோதிப்பார் என்று கேட்டிருக்கிறேன். அதுதான் இசைப்புயல்.

நேரடியாக பார்த்ததை போன்ற உணர்வு கானா, நன்றி!

Jayaprakash Sampath said...

பிரமாதம்... அட்டகாசம்...

//ரஹ்மான் என்ற கலைஞன் தமிழைக் கடந்த பொதுவான இந்திய இசையின் அடையாளமாக மாறி எவ்வளவோ காலம் கடந்து விட்டது. இசைக்கு மொழி இல்லை என்பதை அந்த அரபிக் கடலோரம் ரசித்த ஹிந்திக்காரனும், ஜோதா அக்பர் பாட்டுக் கேட்டு ரசித்த தமிழனும் ஒத்துக் கொள்வான். ஏன் இந்த இரண்டு மொழிகளும் தெரியாமல் இசை மழையை அனுபவிக்க மட்டும் வந்த சில நூறு அவுஸ்திரேலியனும் உணர்ந்து கொள்வான். உண்மையான/நேர்மையான ரசிகனுக்கு அதுதான் இலக்கணம்//

வழிமொழிகிறேன்.... மனப்பூர்வமாக.....

Anonymous said...

பாக்க முடியலை அன்னைக்கு :(

சின்னப் பையன் said...

அட்டகாசமான படங்கள்.. விவரிப்பு... நேரில் பார்த்த உணர்வு. மிக்க் நன்றி கானா...

கானா பிரபா said...

பாலகுமாரன்

மிக்க நன்றி, வீடியோ தொடுப்பு கிடைக்கும் பட்சத்தில் தருகின்றேன்.

சத்யா

ஒரு டிக்கட் போட்டு காலையில் வந்திருக்கலாம் ;)


பால வாசகன்

மிக்க நன்றி

வருகைக்கு நன்றி டொன் லீ

மழை

அதையெல்லாம் கூட சொல்ல வேணுமா ;)

Cable சங்கர் said...

அருமையான விவரிப்பு கானா. நேரில் பார்த்த சந்தோஷம். நன்றி..

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி லோஷன்

வணக்கம் கார்த்திக்

டிவியில் நிகழ்ச்சியில் பாதியைத் தான்
காட்டினார்களாமே? கீபோர்ட் உம் சித்தாரும் வாசித்தவர்கள் அடி பின்னி விட்டார்கள்

வருகைக்கு நன்றி தமிழ்ப்பிரியன், சித்தார்த்

கானா பிரபா said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி லோஷன்

வணக்கம் கார்த்திக்

டிவியில் நிகழ்ச்சியில் பாதியைத் தான்
காட்டினார்களாமே? கீபோர்ட் உம் சித்தாரும் வாசித்தவர்கள் அடி பின்னி விட்டார்கள்

வருகைக்கு நன்றி தமிழ்ப்பித்தன், சித்தார்த்

Unknown said...

அப்படியே நேரில் பார்த்த அனுபவத்தை , பரவசத்தை உணர்கிறேன் ,,,நண்பரே ....
சிலிர்க்கின்றது ,,,,,, மிக்க நன்றி..

கானா பிரபா said...

குசும்பன்

நீங்கள் சொன்னது போல நிகழ்ச்சியில் எல்லா விடையங்களும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற perfection ரஹ்மானின் தனித்துவம், அதை இங்கேயும் கண்டேன்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரகாஷ்

சின்ன அம்மிணி

டிவியில் போட்டதையும் கூட விட்டுட்டீங்களா :(

ச்சின்னப்பையன்

மிக்க நன்றி

KANA VARO said...

நேரிலே பார்த்த அனுபவம்.Thanks

நான் வலைபதிவுக்கு புதியவன்.. உங்களை பற்றி நிறைய அறிந்து கொண்டேன்.. நானும் அதே துரைவீதி தான் ...

Anonymous said...

சூப்பர் நேரில் கண்டது போல் உள்ளது உங்கள் இந்த பதிவு.நன்றி

Unknown said...

அன்ன நேராய் பார்த்த உணர்வு

நல்ல விபரணம்

வினோத் கெளதம் said...

No words to describe..
Juz superb..;)

கானா பிரபா said...

கேபிள், பேரரசன், பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

வரோதயன்

உங்களை அடையாளம் காண முயற்சிக்கிறேன் ;)

SurveySan said...

//ரஹ்மான் வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கலாம், பொம்பிளைகள் பொட்டு வைத்து கும்மி அடித்திருக்கலாம், ரஹ்மான் இன்னும் நிறையத் தமிழ்ப்பாடல்களைப் பாடியிருக்கலாம் என்ற வழக்கமான விமோசனமில்லாத விமர்சனங்களும்//

:)

பின்னிட்டேள்.

அஞ்சலி said...

நிகழ்ச்சியை நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது...அருமையான படைப்பு...

☼ வெயிலான் said...

அருமையான அனுபவப் பகிர்வுக்கு நன்றி பிரபு!

Sridhar said...

Excellent Brother

கானா பிரபா said...

சங்கர், வினோத் கெளதம், சர்வேஷ், அஞ்சலி, சிறீதர், வெயிலான்

வருகைக்கு மிக்க நன்றி

கோபிநாத் said...

ஆகா...நான் தான் லேட்டா!! ;)

தல கூடவே இந்த ஒரு உணர்வு..சும்மா வார்த்தைகளில் புகுந்து விளையாடிட்டிங்க.

கலக்கல் ;)

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி தல ;)

manjoorraja said...

அருமையான வர்ணனை, படங்கள், நேரில் பார்க்கும் உணர்வை கொடுத்துவிட்டீர்கள்.
மிகவும் நன்றி

யோ வொய்ஸ் (யோகா) said...

கானா அண்ணா நீங்கள் எப்படி நிகழ்வை ரசித்தீர்களோ அதே உணர்வை எங்களுக்கும் தந்ததற்கு கோடன கோடி நன்றிகள்...