Pages

Wednesday, July 25, 2007

M.M கீரவாணியின் கீதங்கள்



கடந்த பகுதியில் மரகதமணி என்னும் M.M. கீரவாணியின் அறிமுக காலத்துத் தமிழ்ப்பாடல்களைத் தந்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக விட்டுப் போன பாடல்களோடு இந்தப் பதிவில் தொடர்கின்றேன்.

இந்த ஒலிப்பதிவில், கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த "ஜாதி மல்லி" திரைக்காக கே.எஸ்.சித்ரா பாடும் மறக்கமுடியவில்லை பாடல் இடம்பெறுகின்றது.மலையாள நடிகர்
முகேஷ், குஷ்பு ஜோடி நடித்திருந்தது இப்படத்தில்.

தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பில் வந்த திரைப்படமான "அல்லாரி பிரியுடு" , தமிழில் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார். அந்தப் பாடல்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அன்னமா! உன் பேர் என்பது அன்னமா?" என்ற இனிய பாடல் இடம்பெறுகின்றது. மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை ஸ்ரீதேவி , அரவிந்த் சாமியுடன் இணைந்து மலையாள இயக்குனர் பரதனின் இயக்கத்தில் "தேவராகம்" திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே காதில் தேன் வந்து பாயும் இனிமை கொண்டவை. அந்தத் திரைப்படத்தில் இருந்து " சின்ன சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், சுஜாதா ஆகியோர் பாடுகின்றர்கள்.

எம்.எம்.கீரவாணிக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைக் கொடுத்தது "அன்னமய்யா" என்ற தெலுங்குப்படம். நாகர்ஜீனா நடிப்பில் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படத்தில் இருந்து "அந்தர் யாமி" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.சைலஜா பாடுகின்றனர்.

நிறைவாக "வானமே எல்லை" திரையில் இருந்து "சோகம் இனியில்லை" என்ற பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட நிறைவு பெறுகின்றது M.M கீரவாணியின் கீதங்கள் என்ற இந்த இசைத் தொகுப்பு.

10 comments:

வடுவூர் குமார் said...

"எந்தன் கைகுட்டையை யார் எடுத்தது" இவர் இசை அமைத்தது தானோ! படப்பெயர் ஞாபகம் இல்லை.
அன்னமய்யா பாடல் ஏதோ அடிக்கடி கேட்கிற ராகம் மாதிரி இருக்கிறது.

கானா பிரபா said...

வணக்கம் வடுவூர் குமார்

அன்னமய்யாவில் நிறையப் பாடல்களைப் போட்டிருக்கிறார் மரகதமணி.

எந்தன் கைக்குட்டையை பாட்டு ராஜா சார் "இசை பாடும் தென்றல்" படத்துக்காகப் போட்டது.

வடுவூர் குமார் said...

ஓஹோ! அப்படியா,மிக்க நன்றி.

டண்டணக்கா said...

/*
தமிழில் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார். அந்தப் பாடல்களில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அன்னமா! உன் பேர் என்பது அன்னமா?" என்ற இனிய பாடல் இடம்பெறுகின்றது. மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.
*/

Wow...same here. This movie was one of the fantastic music score. At times, I used here all songs in this movie in a loop, many times. Can't forget every single song in this. Not sure how he did it, some how all songs in this movie were composed differently or uniquely, but it mesmerized me those days. Nice pick.

கானா பிரபா said...

வணக்கம் நண்பரே

யாருக்கு மாப்பிள்ளை யாரோ படப் பாடல்களை உயர்தர ஒலிப்பதிவு கொண்ட சீ.டியாக வைத்திருக்கின்றேன். நீங்கள் சொல்வது உண்மை, அனைத்துப் பாடல்களுமே இனிமை.
ஆஹா மலருக்கு இன்று பிறந்த நன் நாளு, மற்றும் ரோஸ் ரோஸ் ரோசாப்பூவே பாடல்கள் உட்பட.

Sud Gopal said...

டாக்டர்.ராஜசேகர்,மதுபாலா,ரம்யா க்ருஷ்ணவம்சி நடிப்பில் வந்த "யாருக்கு மாப்பிள்ளை யாரோ"வில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கெஸ்ட் அப்பியரன்ஸ் செய்ததாக நினைவு.ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே..சிறுவயதில் பிடித்த பாடல்.

போன வருஷம் வந்த பக்தராமதாசுக்கும் கீரவாணி தான் இசை.இதிலும் பாடல்கள் தேன் மாதிரி இனிக்கும்.அப்புறம் எங்கள் தங்கத்தலைவி பிப்ஸ் நடிப்பில் வந்த ஜிஸ்ம் "மதுகோஷியான்" ஏன் லிஸ்டில இல்லை??

வானமே எல்லையில எனக்குப் பிடித்த "நீ ஆண்டவனா"வை புறக்கணித்தமைக்காக சபையிலிருந்து வெளிநடப்பு செய்யப் போகிறேன் ;-)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
அட இப்படியும் ஒரு இசையமைப்பளர் இருந்தாரா?
இப்போதுதான் அறிந்தேன்.

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா,

இந்த இசையமைப்பாளரின் பாடல்களை நீங்கள் கேட்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லைப் போல.
பாடல்களிலேயே அவரின் அறிமுகம் இப்போது உங்களுக்குக் கிட்டியிருக்கும்.


வணக்கம் சுதர்சன்

நீ ஆண்டவனா பாட்டு இன்னொரு சந்தர்ப்பத்தில் வரும், அதற்காக வெளிநடப்பு எல்லாம்
செய்யாதீர்கள் ;-)

பிபிஷாவின் பாட்டைக் கேட்பதை விட ஒளி ஊடகத்தில் பார்க்கும் வாய்ப்பை ஒருமுறை தருகிறேன் ;-)

ஆ.கோகுலன் said...

இந்தப்பதிவை இன்றுதான் பார்க்கக்கிடைத்தது. அருமையான தொகுப்பு. இவரிற்கு கீரவாணி என்றும் பெயர் இருக்கிறது என்பதை உங்கள் பதிவின் மூலமே தெரிந்து கொண்டேன்.
நிலாமுற்றத்தை நேரடியாகக் கேட்ட வானொலி நேயர்களுக்கு இனிய அனுபவமாய் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
முந்தைய பதிவில் குறிப்பிட்ட 'நிவேதா...' பாட்டொன்றே போதும் இவரது இசைத்திறமைக்கு சான்று பகர. இனிய பாடல்களின் இனிய ஞாபகமூட்டல்களுக்கு மிக்க நன்றி கானாபிரபா.

கானா பிரபா said...

கோகுலன்

கீரவாணி,மரகதமணி, தவிர ஹிந்தியில் எம்.எம்.க்ரீம் என்ற பெயரிலும் இவர் இசைமைத்து வருகின்றார். திறமையானவர், பாலசசந்தர், அர்ஜீன் போன்றவர்களால் அதிகம் அடையாளப்படுத்தப்பட்டவர்.